நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது

CID - Sri Lanka Police Bandaranaike International Airport Sri Lanka Police Investigation
By Faarika Faizal Oct 18, 2025 02:14 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

பொரளை பகுதியில் கொலை முயற்சியொன்றில் ஈடுபட்டு விட்டு நாட்டிலிருந்து தப்பிச் செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(17.10.2025) இரவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்ட முக அங்கீகார தரவு அமைப்பு மூலம் இந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாகவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் Check-in நேரத்தில் மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் Check-in நேரத்தில் மாற்றம்!

துபாய் செல்ல முயற்சி 

இவர், கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவின் கர்தமனாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது | Young Man Arrested At The Airport

அந்நிலையில், சுற்றுலா விசாவில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற வேளை சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர்

விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை பாடகர்

அரசியலுக்காக பகடைக்காய்களாக்கப்படும் தமிழ் - முஸ்லிம் மக்கள்

அரசியலுக்காக பகடைக்காய்களாக்கப்படும் தமிழ் - முஸ்லிம் மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW