கட்டுநாயக்க விமான நிலையத்தில் Check-in நேரத்தில் மாற்றம்!
Bandaranaike International Airport
Colombo
By Kanooshiya
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த அனுமதி இன்று (17.10.2025) நண்பகல் 12 மணி முதல் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் சேவை
இந்த செயன்முறை பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராக மேற்கொள்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.