அமெரிக்க போர் விமானத்தை தாக்கிய ஏமன் ஹவுதிக்கள்
காசாவிற்கு ஆதரவாகவும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், இஸ்ரேலின் ரமோன் விமான நிலையம், அமெரிக்கா யுஎஸ்எஸ் ட்ரோமன் உள்ளிட்ட முக்கிய இலக்குகளை ஏமன் ஆயுதப்படைகள் தாக்கியுள்ளன.
இதனிடையே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஏமன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஏமனிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இது தொடர்பான அறிக்கையில் ஏமன் படையின் யு.ஏ.இ பிரிவு இரண்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஏமன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யகியாசாரி கூறியிருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முதலாவது இரண்டு ட்ரோன்களை பயன்படுத்தி தெற்கு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் உள்ள உம் அல் அஸ்ராஜ் பகுதியில் உள்ள இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்தை குறிவைக்கப்பட்டது.
இதற்கிடையில் இரண்டாவது நடவடிக்கையாக ஆக்கிரமிக்கப்பட்ட டெல்லவியூ பகுதியில் உள்ள இஸ்ரேல் தளத்தை யாபா வகை ட்ரோன் மூலம் குறிவைத்துள்ளனர்.
காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் அங்கு இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும் இந்த இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே அறிக்கையில், வடக்கு செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க விமானம் தாங்கிய கப்பலான யுஎஸ்எஸ் ஹாரி எஸ்ட்ரோமன் மற்றும் அதனுடன் இணைந்த பல போர் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் பல ட்ரோன்களை பயன்படுத்தி ஏமனின் யாவோப் கடற்படை மற்றும் யுஏஇ பிரிவு தாக்குதலை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் விளைவாக ஏமனுக்கு எதிராக அமெரிக்க படைகள் நடத்த தயாராகி வந்த வான்வழி தாக்குதலை ஏமனின் யாவோப் படை முறியடித்தது. மேலும், இந்த தாக்குதலின் போது அமெரிக்க படைகளின் பீதி காரணமாக ஒரு அமெரிக்க எப்8ன் விமானம் விபத்துக்குள்ளானது என குறிப்பிட்டுள்ளார்.
பதில் தாக்குதல்கள்
யு.எஸ்.எஸ் ஹாரி எஸ்ட்ரோமன் கப்பல் தொலைதூர வடக்கு செங்கடருக்கு ஓடிவிட்டது. இந்த நடவடிக்கை அமெரிக்கா ஏமன் போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்டதாக யாவோப் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவிற்கும் ஏமனின் அன்சாரல்லா இயக்கத்திற்கும் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் ஓமானிய மத்தியஸ்த ஒப்பந்தத்தை ஈரானும் சவுதி அரேபியாவும் வரவேற்றன.
சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்கில் ஏமனின் போர் நிறுத்தத்தை எட்டுவது தொடர்பாக ஓமன் சுல்தானகம் வெளியிட்ட அறிக்கையை ரியாத் வரவேற்கின்றது என்று சவுதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறுகையில், ஏமனுக்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பை நிறுத்துவதை வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும் ஏமன் மக்களின் தைரியமான எதிர்ப்பை பாராட்டுவதாக சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், ஏமன் மீது அமெரிக்கா மீண்டும் தனது ஆக்கிரமிப்பை தொடங்கினால் அமெரிக்க படைகளுக்கு எதிரான கடுமையான மற்றும் வேதனையான தாக்குதல்களை நடத்த தயங்க மாட்டோம் என ஏமன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளது .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |