அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸூடன் இணையவுள்ளாரா.. விசனம் வெளியிட்ட ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர்
அக்கரைப்பற்று மக்களின் தீர்ப்பை தேசிய காங்கிரஸ் தலைவர் ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரஸை அந்த மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸூடன் கூட்டு
அட்டாளைச்சேனை பிரதேச சபை விடயத்தில் அதாவுல்லா தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது. அக்கரைப்பற்று மக்களின் நம்பிக்கையை அதாவுல்லா பாதுகாக்க வேண்டும்.
அங்கு அதிகாரத்தை பெற்று அட்டாளைச்சேனையில் மு.காவுடன் கூட்டுச் சேர்வது ஆரோக்கியமற்றது.
அதுமட்டுமன்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சியமைப்பது என்பது அதாவுல்லாவை படு குழியில் வீழ்த்தும்.
அக்கரைப்பற்று மக்களின் தீர்மானத்தை அதாவுல்லா புறந்தள்ளக் கூடாது. முஸ்லிம் காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளை நம்பி அதாவுல்லா செயற்படுவாராக இருந்தால் இனி வரும் தேர்தல்களில் தேசிய காங்கிரஸ் மண் கவ்வும் என்பதை உறுதியாக கூறி வைக்க விரும்புகிறேன்.
மக்களின் தீர்மானத்தை மதித்து முஸ்லிம் காங்கிரஸூடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க முயலும் முடிவை அதாவுல்லா மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |