உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் : மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

Ampara Srilanka Muslim Congress Tourism Eastern Province
By Laksi Oct 02, 2024 08:28 AM GMT
Laksi

Laksi

நாட்டை உற்பத்தி பொருளாதார முறைக்கு மாற்றி அதன் மூலம் ஏழை மக்களின் வாழ்வில் விரைவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஏழை மக்கள் அயராது உழைத்தும் வாழ்கையில் முன்னேற முடியவில்லை என்றால் அதற்கு காரணம் எம்மை ஆட்சி செய்தவர்களினதும் எமக்கு தலைமை கொடுத்தவர்களினதும் தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

அபிவிருத்தி திட்டங்கள்

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 21 வயதுக்குள் அடிப்படை (3S) தகுதிடைய அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பினை பெறுவதற்கு வழி அமைக்க வேண்டும்.உற்பத்தி பொருளாதாரம், முயற்சியாண்மை, கடல்சார் நீரியல் வளங்கள், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இணைந்ததான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் : மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம். சபீஸ் | Working People Should Live In Peace Sm Sabies

கிழக்கு மாகாணத்தின் வளங்களை மையப்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், மாவட்ட வளங்களை பயன்படுத்தும் விதமாக கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குதல். வேளாண்மை பயிர் செய்கையை இரண்டிலிருந்து மூன்று போகமாக மாற்றுவதற்கு உரிய திட்டங்களை செயற்படுத்தல் போன்ற பல திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருக்கிறோம்.

சம்பத் வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சம்பத் வங்கி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

சுற்றுலாத்துறை

அத்தோடு, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நிர்வாக பயங்கரவாதம் மற்றும் காணி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரல், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சட்ட மற்றும் கல்வி பீடத்தினை ஆரம்பித்தல், அனைத்து மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைய கூடியவாறு மக்களுடன் தேவையுடைய அரசாங்க காரியாலயங்களான ஆட்பதிவு திணைக்கள காரியாலயம், குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் காரியாலயம் போன்றவற்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் : மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எம். சபீஸ் | Working People Should Live In Peace Sm Sabies

இலங்கையின் சுற்றுலாத்துறை கேந்திர நிலையங்களாக இருக்கின்ற அறுகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய இடங்களை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அபிவிருத்தி செய்தல். போன்ற பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை செய்ய எண்ணியுள்ளதாக எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.

சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம்

சவால்களை வெற்றி கொள்வதற்கான செயற்பாடுகள் எம்மிடமே உள்ளது: சஜித் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery