காரைதீவில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம்

Ampara Climate Change Eastern Province School Children
By Laksi Dec 11, 2024 05:22 AM GMT
Laksi

Laksi

காரைதீவில் பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம் (DCDC & GVB ) இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட பெண்கள் அமைப்பு அனுசரனையுடன் பிரதேச செயலாளர் ஜீ.அருணன் தலைமையில் நழடபெற்றுள்ளது.

காரைதீவு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.நித்யாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறைசார் உத்தியோகத்தர்களினால் சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்: வெளியான எச்சரிக்கை

அனர்த்த முன்னெச்சரிக்கை

இதன்போது, அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் அதற்கு முன் ஆயத்தம் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் மாணவர்கள் இடைவிலகல் மற்றும் மாணவர்கள் தற்கொலை, அதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டது.

காரைதீவில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயலணிக் கூட்டம் | Working Meeting Against Dairy Violence Karaitivu

அத்தோடு பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் போடப்படுகின்ற கழிவுகளும் அதை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பல விடயங்கள் ஆராயப்பட்டது.

இந்த கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரி பிரதிநிதிகள், பொலிஸ் திணைக்கள பிரதிநிதிகள், வலயக் கல்வி அலுவலக பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery