காஸாவில் அரங்கேறியுள்ள நிகழ்வு! போராளிகளுக்கு கிடைத்த வெற்றி
காசா பகுதியிலுள்ள பலஸ்தீனிய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான காசா மக்களின் முன்னிலையில் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் நான்கு இஸ்ரேலிய கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் அங்கு குவிந்துள்ளதுடன், குறித்த இந்த காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் நேரலை செய்துள்ளது.
200 பலஸ்தீனிய கைதிகள்
மீண்டும் ஒருமுறை காசா போராளிக் குழுக்கள் தங்களது பலத்தை உலகத்திற்கு பறைசாற்றும் முகமாக இஸ்ரேல் தரப்பில் 200 பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யப்படுகின்றனர்.
அவர்களில் 121 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களும், 79 பேர் பல்லாண்டு காலம் இஸ்ரேலிய கொட்டடிகளில் இருந்தவர்களும் ஆகும். மேலும் இதில் 15 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவான்.
இந்த சம்பவங்கள் குறித்து தோஹா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முகமது சலூம் அல்-ஜஸீராவிடம் கூறுகையில்,
நாங்கள் இன்னும் இங்குதான் இருக்கின்றோம் என்பதை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹமாஸின் வெற்றி
மேலும், நாங்கள் இன்னும் பலத்துடன் தான் இருக்கின்றோம் என்பதை காட்டியுள்ளனர். உள்ளூர் மக்கள் இன்னும் எங்களை நம்பி எங்கள் பின்னால் நிற்கின்றார்கள் என்பதை பறைசாற்றியுள்ளனர்.
இந்த காட்சிகள் ஹமாஸிற்கும் காசாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்
கைதிகள் தற்போது ஒப்படைக்கப்பட்டிருக்கும் காசா பகுதியில் தான் 15 மாதங்களாக இஸ்ரேல் படை தங்கி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து அந்த நகரம் தங்களது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வந்தது தற்போது அதே ஊரில் இருந்து தான் கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புது சீருடை கார்கள் ஆயுதங்கள் பாதுகாப்பு உபகரணங்களோடு நூற்றுக்கணக்கான ஹமாஸ் இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் அங்கு தோன்றியுள்ளனர். இது உலக அரங்கில் இஸ்ரேல் தோல்வியை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |