மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் அமைப்பின் வருடாந்த கண்காட்சி
மட்டக்களப்பில் 2024 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலைய கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, இருதயபுரம், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி நிலையத்தில் நேற்று(30) இடம்பெற்றது.
அத்துடன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் டிலானி ஆதித்தன், சிரேஷ்ட தையல் போதனாசிரியர் மற்றும் மாதர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
வருடாந்த கண்காட்சி
அதேசமயம் இந்த மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையமானது கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கி வருகின்றது.
இங்கு யுவதிகளும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், பயிற்சிகளை மேற்கொண்டு திறன்பட முடித்த யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப்பணிப்பாளர் கே.இளங்குமுதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் இந்த கண்காட்சி நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக முன்னாள் கிராம அபிவிருத்தி மாகாணப்பணிப்பாளர் மற்றும் தற்போதைய மாநகரசபை ஆணையாளருமான என்.தனஞ்ஜெயன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கோகுலராஜன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.சதாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |