புத்தளத்தில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் கைது
Puttalam
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (28) இரவு முந்தல் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து, 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |