பொது மக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகள்! போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க(Nishantha Anuruddha Weerasinghe) தெரிவித்துள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்ட வட்சப் இலக்கம்
இதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகத்திடம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகளை 071 40 33 300 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து திணைக்களத்தின் முகநூல் பக்கம் மூலமும் முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என மற்றொரு வாய்ப்பும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |