துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவருக்கு பாதாள உலகுடன் தொடர்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளர்.
இன்று (22.10.2025) காலை 10.30 மணியளவில் பிரதேச சபை தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் அவரை நோக்கி துப்பாக்கிச் பிரயோகம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த லசந்த விக்ரமசேக, மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பு
மேலும், முதற்கட்ட விசாரணைகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் வந்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் "கடிதத்தில் கையெழுத்திட வந்ததாக" கூறி, தலைவரை அணுகி, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச காரசாரமாக கருத்து வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மிதிகம லசாவுக்கு பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |