காலநிலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Aug 24, 2024 02:09 AM GMT

நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வ கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குடியுரிமை இரத்து செய்யப்படும்! தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்

குடியுரிமை இரத்து செய்யப்படும்! தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

ஜனாதிபதி வேட்பாளர் இலியாஸ் மறைவுக்கு ரிஷாட் இரங்கல்

நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ரணில் தெரிவிப்பு

நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ரணில் தெரிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW