நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ரணில் தெரிவிப்பு

Ali Sabry Athaullah A L M Ranil Wickremesinghe
By Fathima Aug 23, 2024 05:34 PM GMT
Fathima

Fathima

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலவந்தமாக அடக்கம் செய்யப்பட்டதன் மூலம் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அதனை தனது அரசாங்கம் செய்யவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் 20வது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து இன மக்கள்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “எதிர்வரும் தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துவேன். இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது என்னைப் பற்றி நினைக்காமல், உங்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ரணில் தெரிவிப்பு | Equal Rights For All Ranil Wickremesinghe

மேலும், ஒருவரின் மரணத்தின் பின்னரான இறுதிச் சடங்குகள்  எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை உறுதிசெய்யும் சட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW