குடியுரிமை இரத்து செய்யப்படும்! தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ள விடயம்
ஜனாதிபதி தேர்தலின் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மொஹமட் இல்யாஸ் மரணமடைந்தாலும் அவரின் பெயரை வாக்குச்சீட்டில் இருந்து நீக்கமுடியாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அச்சிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டு
2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மொஹமட் இல்யாஸ் நேற்றையதினம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக அவரின் பெயரை வாக்கு சீட்டில் இருந்து நீக்கமுடியாதென தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |