வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 17, 2024 01:58 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது

யுக்திய நடவடிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Weather Announcement Today Sri Lanka

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

மட்டக்களப்பில் பாடசாலை சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியின் போலி வாக்குறுதிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் போலி வாக்குறுதிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW