தேசிய மக்கள் சக்தியின் போலி வாக்குறுதிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Trincomalee Anura Kumara Dissanayaka Imran Maharoof
By Mubarak Sep 16, 2024 06:55 PM GMT
Mubarak

Mubarak

Courtesy: H A Roshan

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்படும் என்று தேர்தல் மேடைகளில் போலி வாக்குறுதி வழங்கப்படுகின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (16.09.2024) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

“நாட்டில் தற்போது வலுவான ஊழல் ஒழிப்பு சட்டங்கள் உள்ளன. இதன் மூலம், இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அமெரிக்க பேராசிரியரின் பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அமெரிக்க பேராசிரியரின் பகிரங்க எச்சரிக்கை

ஊழல் சம்பந்தமான பைல்கள்

இதன் அடிப்படையில் தான் முன்னாள் அமைச்சர் பௌசி போன்றோர் அண்மையில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டனர். 

தேசிய மக்கள் சக்தியின் போலி வாக்குறுதிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Fake Promises Of National People Power

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தன்னிடம் 400 பேரின் ஊழல் சம்பந்தமான பைல்கள் இருப்பதாக தெரிவித்தார். அப்படியாயின் ஏன் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இது தொடர்பாக முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என்று கேட்க விரும்புகின்றேன்.

தற்போது தகவல் பல தன்னிடம் இருப்பதாக கூறும் அவர், அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காது அதிகாரம் கிடைத்த பின் நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

பலனற்ற வாக்குறுதிகள்

எனவே, அதிகாரம் கிடைத்தால் கூட ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் போலி வாக்குறுதிகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Fake Promises Of National People Power

உண்மையில் அவர் இந்நாட்டில் ஊழல் ஒழிய வேண்டும் என்று விரும்புவாராயின் தன்னிடம் உள்ள ஆதாரங்களுள் சிலதையாவது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

அப்போது தான் அவர் நடவடிக்கை எடுக்க தயாராகிறார் என்று நம்ப முடியும். இதனை விடுத்து மக்களை ஏமாற்றுவதற்காக வெறுமனே மேடைகளில் வாக்குறுதி வழங்குவதில் எந்த பலனும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஜனாதிபதி வேட்பாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

சஜித் பிரேமதாச தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி

சஜித் பிரேமதாச தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட சிரேஸ்ட சட்டத்தரணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW