இன்றைய தினம் இரவில் இடியுடன் கூடிய கனமழை ஏற்பட வாய்ப்பு
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும், இன்று மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் சேர்ந்து, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அத்தோடு வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
இதனுடன், மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள் மற்றும் தென் மாகாணப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், தற்காலிகமாக உள்ளூர்மயமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |