இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை!

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Jan 26, 2026 07:37 AM GMT
Fathima

Fathima

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த 3 மாத கால அவகாசம் கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

இருக்கைப்பட்டி அணிவது கட்டாயம் 

இதன்படி, வாகன சாரதி மற்றும் பயணிக்கும் அனைவரும் இருக்கைப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை! | Wearing A Seat Belt Is Mandatory

அத்துடன் வாகன சாரதி மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணி ஆகிய இருவருக்கும் இச்சட்டம் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் இந்த விதிமுறையை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.