பொதுமக்களுக்கான அறிவிப்பு: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயரக்கூடும்
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, சுமார் 15 சிறிய மற்றும் பெரிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் ஜெனரல் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான அறிவித்தல்
அத்துடன், இராஜாங்கனை, சியம்பலங்கமுவ, தெதுரு ஓயா நீர்த்தேக்கம், பதலகொட, ஹத்வதுன்ஓயா மற்றும் யோதவாவி நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் எனவும், அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |