திருகோணமலையில் 12 மணித்தியால நீர் வெட்டு: வெளியான அறிவிப்பு
திருகோணமலையில் 12 மணித்தியாலங்கள் குடி நீர் விநியோகத் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் (07.11.2024) ஆம் திகதி அன்று காலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை குடி நீர் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை , கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தவேலை காரணமாக நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர் வெட்டு
குறித்த நீர் வெட்டானது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகாமம்,கிண்ணியா, பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பகுதியிலும் குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் இறக்கக் கண்டி பாலம் வரையான பகுதிகளிலே நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த நிலையில், முன் கூட்டியே போதுமான நீரை சேமித்து வைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நீர் வெட்டு மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |