திருகோணமலையில் குளவிகொட்டு சம்பவம் : 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Trincomalee Sri Lankan Schools School Incident
By Shalini Balachandran Jul 31, 2024 10:32 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட அல்-அக்சா தேசிய பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (30) காலை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாடசாலை வளாகத்தில் குளவி கூடு ஒன்று இருந்ததாகவும் குறித்த குளவி கூடு கலைந்தமையினால் இவ்வாறு மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மேலும் ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மேலதிக விசாரணை

அத்தோடு, இவ்வாறு குளவி கோட்டுக்கு இலக்கான 21 மாணவர்களும் மற்றும் ஆசிரியர் ஒருவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் குளவிகொட்டு சம்பவம் : 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Wasps In A School In Trincomalee

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW