மேலும் ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

By Mayuri Jul 31, 2024 10:15 AM GMT

தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விவசாயிகளுக்கு நேரடியாக தெரிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1916 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

தென்னைச் செய்கை சபைக்கு பணிப்புரை

வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட தென்னைச் செய்கை தொடர்பான பிரச்சினைகளை விவசாயிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துமாறு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, தென்னைச் செய்கை சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

மேலும் ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் | Also Introducing An Emergency Phone Number

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்கப்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாக பதிலளித்து தேவையான பதில்களை வழங்க அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் பண்டுக வீரசிங்க தெரிவித்தார்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW