சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

Sri Lanka Police Sri Lanka Social Media Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 19, 2024 05:50 AM GMT
Laksi

Laksi

தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரசார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நிஹால் தல்துவா மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம்பித்துள்ளது. தேர்தலின் போதும் அதன் பின்னரும் உளவுத்துறையினர் தேவையான முழுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

பொலிஸார் விசேட அவதானம் 

இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவதானம் செலுத்துங்கள்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம் | Warning To Social Media Users In Sl

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை தேடுவதற்கு சமூக ஊடக நிறுவனங்களின் உதவியை நாடவுள்ளோம்.

புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இது தொடர்பில் செயற்பட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கால வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!

தேர்தல் கால வானிலை குறித்து வெளியான அறிவிப்பு!

வவுனியாவில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW