அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Climate Change Sri Lanka Fisherman Weather
By Rukshy Apr 10, 2025 03:34 AM GMT
Rukshy

Rukshy

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ​மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபையில் ரிஷாட் எம்.பி வெளிப்படுத்திய உண்மைகள்!

சபையில் ரிஷாட் எம்.பி வெளிப்படுத்திய உண்மைகள்!

முன்னெச்சரிக்கை

இந்நிலையில் குறித்த கடல் பகுதியில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை நிலையம் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Of Rough Seas For Fishermen

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - மத்திய வங்கக் கடலில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

பலத்த காற்று

அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்காள விரிகுடாவில் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning Of Rough Seas For Fishermen

மேலும், குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக (மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில்) பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும், கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அவதானம் செலுத்துமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடல்சார் சமூகத்திடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உச்சம் தொடும் அமெரிக்க டொலர் பெறுமதி

உச்சம் தொடும் அமெரிக்க டொலர் பெறுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW