உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
எஸ்.ஐ.எஸ் என்ற அரச புலனாய்வு சேவையில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கரடியனாறு புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரி ஆவார்,
விசாரணை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த சஹ்ரான் ஹாசிமின் ஆதரவாளர்களால் 2018 ஆம் ஆண்டு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே, இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் கொலை தொடர்பான விசாரணைகளைத் தவறாக வழிநடத்தும் வகையில் செயற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து குற்றப்புலனாய்த்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |