முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Facebook Money Social Media
By Mayuri Aug 13, 2024 04:52 AM GMT
Mayuri

Mayuri

முகப்புத்தக ஆதரவுக் குழுக்களாக காட்டிக்கொண்டு மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஸ்ட தகவல் தொழிநுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார்.

மோசடி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முகப்புத்தக ஆதரவுக் குழுக்களாகக் காட்டிக்கொண்டு வட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுகிறது.

அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவு: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அரச ஓய்வூதியதாரர்களுக்கான மேலதிக கொடுப்பனவு: நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning For Facebook Users Sri Lanka

முகப்புத்தக கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக முகப்புத்தக ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதை திரும்பப்பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இது நடித்து மோசடி செய்யும் கும்பலின் செயற்பாடு என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, உங்கள் முகப்புத்தக பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டால் அல்லது செயலிழக்க செய்யப்பட்டால், முகப்புத்தக பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் வரும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்க அல்லது உங்கள் தகவலை வெளியிட வேண்டாம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பில் வெளியான தகவல்

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning For Facebook Users Sri Lanka

இது உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் முகப்புத்தக கணக்கு தொடர்பான கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் முகப்புத்தக கணக்கிற்கான அணுகல் வெளி தரப்பினருக்கு அனுமதிக்கப்படும்.

வர்த்தக முகநூல் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW