தரமற்ற பொருட்களால் குழந்தைகள் ஆபத்தில் : பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தரமற்ற பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவதனால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக உலக புற்றுநோய் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பாடசாலை செல்லக் கூடிய குழந்தைகள் பயன்படுத்தும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவுப் பெட்டிகள் 75 வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் பாவனை
இந்நிலையில் இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், எவ்வாறாக இருப்பினும் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பாவனையும், விற்பனையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இச்சாதனங்கள் குழந்தைகளை மிகவும் ஆபத்தான முறையில் பாதிக்கின்றன என சுகாதார பரிசோதகர் அமைப்பின் தலைவர் உபுல் ரோஹன தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வாறு தரமற்ற பொருட்களை வேறு நாடுகளில் இருந்து கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்வதனால் சிறுவர்கள மத்தியில் பெருமளவில் பாவனைக்குட்படுத்தப்படுகின்றது.
தற்போது ஆபத்தை உணர முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர். தாம் கொள்வனவு செய்யும் பொருள் ஆரோக்கியமானதா என ஆராயாமல் தயாரிப்பின் விலை மற்றும் அதன் அழகைப் பற்றி மட்டுமே கவலைகொள்கின்றனர்.
ஆரோக்கியமான தெரிவு
உணவுப் பெட்டி மற்றும் தண்ணீர் போத்தலுக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் பிபிஏ இல்லாததா அல்லது பொருளின் கீழே 5 என்ற எண் எழுதப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இல்லையெனில், பொருட்களில் கண்ணாடியுடன் ஒரு முட்கரண்டியின் குறி இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.
இவ் இரண்டு குறிகளும் கொள்வனவு செய்யும் பிளாஸ்டிக் பொருளில் இருக்குமானால் குழந்தைகள் மட்டுமன்றி பெற்றோர்களும் பயன்படுத்த உகந்தவை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இப் பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் விராஜ் ஜயசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |