நாடாளுமன்றத் தேர்தல்: மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 218 தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று (11) நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தலுக்கான ஏற்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,49,686பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 17003பேரும் தகுதி பெற்றிருந்தனர்.
மேலும், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |