கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

Kandy Sri Lanka Central Province
By Laksi Dec 04, 2024 03:10 AM GMT
Laksi

Laksi

அகில இலங்கை கிக்பொக்சிங் போட்டியில் வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

குறித்த போட்டியானது 2024 நவம்பர் மாதம் 29 ஆம்‌ திகதி முதல் டிசம்பர் 1ஆம் திகதி வரை நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, அகில இங்கை கிக்பொக்சிங் போட்டித் தொடரில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் எம்.என்.‌ நபீர் அஹமட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

தங்கப் பதக்கம்

வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் இந்த மாணவர் வெலம்பொடையைச் சேர்ந்த M.N.நலீம் S A. நசீரா தம்பதியினரின் புதல்வராவார்‌.

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை | Velambodai Muslim Student Gold Medal In Kickboxing

இந்த வருடம் தங்கப் பதக்கம் வென்ற இந்த மாணவர் கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடமும் நடந்த போட்டிகளில் முறையே தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

கம்பளையைச் சேர்நத D.M. நவ்ஷாத்  இந்த மாணவரின்‌ பயிற்றுப்பாளராகசெயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: பிரதமர் ஹரிணி

நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: பிரதமர் ஹரிணி

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery