வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!
வாகன இறக்குமதியை கட் டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து, பரிசீலித்து வருவதாக அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இறக்குமதி கட்டுப்பாடு
இருப்பினும், அத்தகைய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
அத்துடன், அத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும்,
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப் பகுதியில், வாகன இறக்கும திக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஊடாக, 200 பில்லியன் ரூபா வுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |