மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Economy of Sri Lanka Vegetables
By Shalini Balachandran Jul 18, 2024 02:54 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல் மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லறை விலை

இதற்கமைய,ஒரு கிலோ தக்காளியின் சில்லறை விலை 80 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ பச்சை மிளகாய் சில்லறை விலை 500 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Vegetables Prices In Srilanka Today

மேலும், போஞ்சி கிலோ ஒன்றின் விலை 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் மற்றும் கரட் சில்லறை விலை 600 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதுடன் தேங்காய் ஒன்றின் விலை சில பிரதேசங்களில் 140 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW