வாழைச்சேனையில் கிராம சேவகர் மீது தாக்குதல்

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Dec 21, 2024 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராம சேவகரை மதுபோதையில் வந்த குழுவொன்று தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (20) வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு துறையடியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராம சேவகர்  வெளிக்களக்கடமை நிமித்தம் வெளிச்சென்று அலுவலகம் திரும்பும் வழியிலே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! வாகன இறக்குமதிக்கான அனுமதி

விசாரணை

இது தொடர்பில் கிராம சேவகர் தெரிவிக்கும் போது,

பிரதேச வாசி ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றினுள் அத்துமீறி காணியை சுற்றி வேலி அமைத்திருந்த தகவல் அறிந்து தாம் நேரில் சென்று அதனை அகற்றுமாறு கூறியபோது அவ்விடத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

வாழைச்சேனையில் கிராம சேவகர் மீது தாக்குதல் | Valaichenai Gs Assaulted And Admitted At Hospital

குறித்த காணி விடயம் தொடர்பாக மேற்படி நபர் இன்று தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முரன்பாட்டில் ஈடுபட்டதாகவும் இதன்போது இருவருக்குமிடையில் கருத்துமுரன்பாடு ஏற்பட்டது.

பின்னர் தமது வெளிக்கள கடமை நிமித்தம் வெளியில் சென்றபோது குறித்த நபர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் கம்பு, பொல்லுகள் சகிதம் வந்து தம்மை தாக்கினர்.

வாழைச்சேனையில் கிராம சேவகர் மீது தாக்குதல் | Valaichenai Gs Assaulted And Admitted At Hospital

இதன்போது சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிலர் தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் பற்றி கேள்வி யுற்ற கோறளைப்பற்று பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டுள்ள கிராமசேகரை பார்வையிட்டதுடன், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

இலங்கையில் தீவிர பாதுகாப்பு : 40,000 பொலிஸார் பணியில்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW