கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்

Port of Colombo Sri Lanka United States of America
By Shalini Balachandran Jul 24, 2024 10:36 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் கூற்றுப்படி, 155 மீற்றர் நீளமுள்ள அர்லீ பர்க் கிளாஸ் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் கப்பல் 323 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானம் : பலர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில்

கப்பலின் தலைவர் ஜொனாதன் பி கிரீன்வால்ட் இலங்கையின் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவை சந்தித்துள்ளார்.

கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல் | Us Navy Ship Michael Murphy Arrives In Colombo

யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி கொழும்பு துறைமுகத்தில் தங்கி நிற்கும்போது வீரர்கள் இலங்கையில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க கடற்படைக் கப்பல் வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு

பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW