19 நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை!
அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடாரில் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.