இலங்கை ஜனாதிபதித் தேர்தலை வரவேற்கும் அமெரிக்கா
இலங்கை (Sri Lanka) ஜனாதிபதித் தேர்தலை இலங்கைக்கான அமெரிக்கா (America) தூதுவர் ஜூலி சங் (Julie Chung) வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்லேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் இன்று (26) அறிவித்திருந்தது.
ஜனாதிபதித் தேர்தல்
இது தொடர்பாக அவர் குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.
We welcome the Election Commission announcement of September 21 presidential elections, affirming Sri Lanka's longstanding commitment to democracy. We look forward to free and fair elections that empower Sri Lankan citizens to determine their future.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 26, 2024
இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |