இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் : ஐக்கிய சமாதான கூட்டமைப்பு
இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கர் ஒட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை, நேற்று(09) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலிய அத்துமீறல்களை கண்டித்து நாங்கள் அங்கம் வகிக்கும் சபைகளில் கண்டன தீர்மானங்களை நிறைவேற்ற தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகளின் முடிவு
அங்கு கருத்து வெளியிட்ட அவர், பொத்துவில் அறுகம்பே பகுதியில் அரச அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலிய வழிபாட்டு தளம் (சபாத் இல்லம்) அருகில் இருக்கும் பள்ளிவாசலும் இருள் சூழ்ந்து இஸ்ரேலிய வழிபாட்டு தளத்தின் வாகன தரிப்பிடம் போன்று மாறியுள்ளது.
கிழக்கில் அரசியல் செய்யும் மூன்று காங்கிரஸ் தலைவர்களும் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி அந்த பள்ளிவாசலை எதிர்காலத்தில் குறைந்தது மூடிவிடுவதிலிருந்தாவது பாதுகாக்க வேண்டும் என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதி தலைவர் கலாநிதி ஹக்கீம் ஷெரீப், இணைப்பாளர் ஏ.எம். அஹூவர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |