சம்மாந்துறையில் முத்திரையில்லா தராசுகள் : 14 பேருக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள்

Sri Lankan Peoples Eastern Province Crime Sammanthurai
By Rakshana MA Feb 07, 2025 07:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) வெல்லாவெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகளை முற்றுகையிட்ட நிலையில்,  முத்திரை குத்தப்படாது மற்றும் அனுமதியற்ற 43 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது, 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன்(Jasrina Uleka Muralitharan) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

நடவடிக்கை

இது தொடர்பில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்ததற்கமைய, கடந்த இரு தினங்களாக இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளர் விநாயகமூர்த்தி, விக்கினேஸ்வரன் தலைமையிலான உத்தியோகத்தர்களால், வெல்லா வெளி, வவுணதீவு பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள கடைகள் மற்றும் வயல் பகுதிகளில் நெல் கொள்வனவு செய்யும் இடங்கள் உள்ளிட்ட 110 இடங்களை முற்றுகையிட்ட போது, இந்த அளவீட்டு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்மாந்துறையில் முத்திரையில்லா தராசுகள் : 14 பேருக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் | Unstamped Scales In Sammanthurai

மேலும், இதன்போது அங்கு அனுமதியற்ற மற்றும் முத்திரையிடாத 43 தராசுக்களை கண்டுபிடிக்கப்பட்டதுடன், இதனை பாவனை செய்த 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இடைத்தரகர்கள் தான் இவ்வாறான சட்டவிரோத தராசுகளை பாவித்து நெல்லை அநியாய விலைகளுக்கு கொள்வனவு செய்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

எனவே, இவ்வாறான இடைத்தரகர்களை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் என அரசாங்க அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

காசாவை பொறுப்பேற்கும் ட்ரம்பின் அறிவிப்பு : உலகளவில் வெளியாகியுள்ள எதிர்ப்பலைகள்

காசாவை பொறுப்பேற்கும் ட்ரம்பின் அறிவிப்பு : உலகளவில் வெளியாகியுள்ள எதிர்ப்பலைகள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery