ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்
இந்த ஜனாதிபதி தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி பல ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக வெகுதொலைவில் வசிக்கும் யாழ்ப்பாணம், ருஹூணு, களனி ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏர் - சிப் சேவை: கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் உடன்படிக்கை கைச்சாத்து
பிரச்சினைக்கு விரைவான தீர்வு
பெப்பரல் Paffrel அமைப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்குவது தொடர்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நிமல் புஞ்சிச்சேவா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |