பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

Srilanka Muslim Congress M A Sumanthiran Sri lanka election 2024 General Election 2024
By Laksi Sep 26, 2024 05:19 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து பலமானதொரு தரப்பாகப் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் (24) கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரள்வது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

ஏனைய கட்சிகளுடனும் கூட்டணி

இது பற்றி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், "அடுத்த தேர்தலில் அரசொன்றை அமைப்பதற்காக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராகி வருகின்றோம்.

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல் | Unity In General Elections Tamil Muslim Parties

இம்முறை தேசிய மக்கள் சக்தியே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான முக்கிய சவாலாகக் காணப்படுகின்றது.ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அப்பால் இருக்கும் ஏனைய கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் ஜனநாயகத்துக்கு சிறந்த அடையாளமாக அமைந்துள்ளன. வன்முறைகளற்ற அமைதியான புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு தலைவணங்குகிறோம்’’ என்று சுட்டிக்காட்டினார்.

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW