நியமன புறக்கணிப்பை எதிர்த்து யூனானி வைத்தியர்களால் போராட்டம்(Photos)

Colombo Government Of Sri Lanka SL Protest
By Fathima Jun 02, 2023 10:45 PM GMT
Fathima

Fathima

வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்களாகிய புறக்கணிப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது.

இப்போராட்டமானது யூனானி வைத்தியர்களால் நேற்றையதினம் (02.06.2023) மஹரகம நாவின்ன பகுதியில் அமைந்துள்ள ஆயுள்வேத திணைக்களத்தின் அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டம் குறித்து பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில்,

ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும்போது ஆயுர்வேத சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது.

வைத்தியர்களுக்கு அநீதி

ஆனால் தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம் தற்போது வழங்குவதானது யூனானி வைத்தியர்களாகிய எமக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

கடந்த காலங்களில் ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனங்களின் போது ஒரே முறையில் 7 ஆயுர்வேத வைத்தியர்களும் இரு யூனானி வைத்தியர்களும் ஒரு சித்த வைத்தியரும் உள்வாங்கப்பட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.


தீர்வு பெற்றுத்தர வேண்டும்

ஆனால் தற்போது வழங்கப்பட இருக்கின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்களில் யூனானி வைத்தியர்கள் உள்ளீர்க்கப்படாமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நியமனத்தில் யூனானி வைத்தியர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தேவையான பணிப்புரையினை உரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் யூனானி வைத்தியர்களாகிய எமக்கு தற்போது இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதி தொடர்பில் உரிய தரப்பினர் தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW