ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் முன்வைத்துள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe Risad Badhiutheen Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Fathima Jun 02, 2023 12:11 AM GMT
Fathima

Fathima

யூனானி வைத்தியர்களின் நியமனம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை நேற்று(01.06.2023) அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில்,ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை மீறப்பட்டுள்ளது.

யுனானி வைத்தியர்கள்

ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் முன்வைத்துள்ள கோரிக்கை | Unani Physicians Prescribing Ayurvedic Medicine

இம்முறை 100க்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம் வழங்குவது, யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்.

ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனங்களின் போது, ஒரே முறையில் 7 ஆயுர்வேத வைத்தியர்களும் இரு யூனானி வைத்தியர்களும் ஒரு சித்த வைத்தியரும் உள்வாங்கப்பட்டு, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், இம்முறை வழங்கப்பட இருக்கின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்களில், யுனானி வைத்தியர்கள் உள்ளீர்க்கப்படாமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது டன், இது யுனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தான் கருதுவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் முன்வைத்துள்ள கோரிக்கை | Unani Physicians Prescribing Ayurvedic Medicine

மேற்படி ஆயுர்வேத வைத்தியர்களின் நியமனத்தில், யூனானி வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாதிக்கப்பட்டுள்ள யூனானி வைத்தியர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த நியமனத்தில் யூனானி வைத்தியர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தேவையான பணிப்புரையை உரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்,ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்பட்டு இருக்கின்ற அநீதி தொடர்பில் தெளிவுபடுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.