இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம்: சந்தேகநபர்கள் இருவர் கைது
இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் அதிபர் ஜெனரல் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த கைது தொடர்பான செய்திகள் இன்று (24) வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து குறிப்பாக இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள அருகம்பேயில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஹிஸ்புல்லா தரப்பினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை, இஸ்ரேலிய குடிமக்களுக்கு உடனடியாக தென்னிலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் அறுகம்பே வளைகுடா பகுதியை நான்காவது அச்சுறுத்தலாக வகைப்படுத்தியுள்ளது.
அதேவேளை கைதான சந்தேக நபர்களுக்கான உதவிகளை வழங்கும் தரப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸார் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |