இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்..
Sri Lanka Police
Matara
Accident
By Rukshy
மாத்தறை (Matara) - தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
35க்கும் மேற்பட்டோர் காயம்
குறித்த விபத்தில் 35இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 29 பேர் கந்தர மருத்துவமனையிலும், மேலும் 6 பேர் மாத்தறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



