சாதாரண தர பரீட்சை தொடர்பில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Rakshana MA
இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளுக்கும் இன்று(07.03.2025) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள்
2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும், தனியார் பரீட்சார்த்திகளின் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |