இரு நாடுகளின் சந்திப்பு : காசாவைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

Benjamin Netanyahu Donald Trump United States of America Israel Gaza
By Rakshana MA Apr 08, 2025 05:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

காசா ஒரு ஆபத்தான மரணப் பொறி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேற்று(07) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் காசா நிலப்பகுதி மீண்டும் கட்டமைக்கப்படும் போது, ​​அங்குள்ள மக்களை வெளியேற்றும், டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார்.

இன்று சூரியனின் இயக்கத்தில் நிகழவுள்ள மாற்றம்!

இன்று சூரியனின் இயக்கத்தில் நிகழவுள்ள மாற்றம்!

சந்திப்பு

அத்துடன், காசா மக்கள் அந்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அது ஒரு மோதல் மண்டலமாக இருக்கும்போது, ​​அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் நெதன்யாகு கூறினார்.

இரு நாடுகளின் சந்திப்பு : காசாவைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட தகவல்! | Trump And Netanyahu Meets

அதேவேளை, அவர் அதை உக்ரைன் மற்றும் சிரியா போன்ற பிற மோதல்களுடன் ஒப்பிட்டு, "அங்கு மக்கள் சண்டையிலிருந்து தப்பி ஓட அனுமதிக்கப்பட்டனர்.

காசா மக்களை ஏற்றுக்கொள்ள விரும்பும் பிற நாடுகளுடன் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ட்ரம்பின் நிலைப்பாடு

அதேவேளை இதன்போது கருத்து தெரிவித்த ட்ரம்ப், பாலஸ்தீன குடியிருப்பாளர்களுக்கு காசா ஒரு "பாதுகாப்பான களமாக" இருப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளின் சந்திப்பு : காசாவைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட தகவல்! | Trump And Netanyahu Meets

ஆனால், "காசாவை இஸ்ரேல் ஒருபோதும் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது, அவர்கள் ஏன் அதைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறிய ட்ரம்ப் 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்ட்ரிப்பில் இருந்து விலகியதைக் சுட்டிக்காட்டினார்.

மேலும், "அவர்களுக்கு அமைதி வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் அது பலனளிக்கவில்லை, காசா ஒரு ஆபத்தான மரணப் பொறி” எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்! சந்தேக நபர் கைது

ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்! சந்தேக நபர் கைது

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல்

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW