ஏறாவூரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்! சந்தேக நபர் கைது
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு கடை முதலாளி ஒருவர் அதிரடி சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(08) அதிகாலை 1.30 மணியளவில் 27 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இந்த சுற்றி வளைப்பு நடவடிக்ரகை முன்னெடுக்கப்ட்டுள்ளது.
சுற்றி வளைப்பு
அதன்படி, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித்த லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 01.30 மணியளவில் ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழயை இரும்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை முதலாளியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 27 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் சதாம் உசையின் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |