திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு
திருகோணமலை மாநகர சபை மேயராக இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த கந்தசாமி செல்வராசா பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (28) இடம்பெற்ற மேயர் தெரிவு தொடர்பான கலந்துரையாடலின் போது அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குனதாசன் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சேவைக்கால பணிகள்
இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கை தமிழரசு கட்சியினை சேர்ந்த ஒன்பது பேரும் திருகோணமலை மேயராக கந்தசாமி செல்வராசாவை பரிந்துரை செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, கருத்து தெரிவித்த கந்தசாமி செல்வராசா, ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலமாக என்னை மேயராக பரிந்துரை செய்து தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அத்துடன் எனது சேவைக்காலத்தில், நகர அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலம் அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும், எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுப்பேன் என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



