திருமலையில் அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்
                                    
                    Trincomalee
                
                                                
                    Sri Lankan Peoples
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளின் வழிநடத்தலில் அதிரடியான சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த நடவடிக்கைகளானது, நேற்று (15) திருகோணமலை நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மட்டிக்களி, மட்கோ நீதிமன்ற வீதி, தபால் கந்தோர் வீதி போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.
திடீர் சோதனைகள்
இதன்போது இங்கு 33 வியாபார நிலையங்களில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சுகாதார முறையில் காணப்படாத 15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 

 
                                        
                                         
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    