முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்..!

Batticaloa Government Employee Government Of Sri Lanka Sri lanka Post
By Rakshana MA Jul 16, 2025 08:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

அஞ்சல் திணைக்களத்தில் (Department of Posts) உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே.பாத்திமா ஹஸ்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இலங்கையின் அஞ்சல் திணைக்கள வரலாற்றில் இதற்கு முன்னர் இந்தப் பதவிக்கு முஸ்லிம் பெண்ணொருவர் நியமனம் பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவில்லா கடற்கரை...கிண்ணியாவில் அரசாங்கத்துடன் இணைந்த மக்கள்

கழிவில்லா கடற்கரை...கிண்ணியாவில் அரசாங்கத்துடன் இணைந்த மக்கள்

முக்கிய பதவி

மட்டக்களப்பு - ஏறாவூரைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னா, அஞ்சல் திணைக்கள உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக பதவி உயர்வு வழங்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் அஞ்சல் பயிற்சிப் போதனாசிரியராகப் பணியாற்றினார்.  

முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்..! | First Muslim Woman Postal Audit Sri Lanka

அஞ்சல் திணைக்களத்தினால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உதவி அஞ்சல் அத்தியட்சகர்களுக்கான பரீட்சையில் அஞ்சல் திணைக்களத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றிய 39 பேர் தேர்ச்சிபெற்றிருந்தனர்.

அவ்வாறு சித்தியடைந்தவர்களில் 12 பேர் அஞ்சல் திணைக்கள உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்கர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

டிஜிட்டல் ID திட்டத்தில் தரவு மீறல் இல்லை : உறுதி செய்யும் இலங்கை அரசாங்கம்

டிஜிட்டல் ID திட்டத்தில் தரவு மீறல் இல்லை : உறுதி செய்யும் இலங்கை அரசாங்கம்

சம்மாந்துறை தவிசாளரின் திடீர் கள ஆய்வு

சம்மாந்துறை தவிசாளரின் திடீர் கள ஆய்வு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW