சம்மாந்துறை தவிசாளரின் திடீர் கள ஆய்வு
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
சம்மாந்துறை (Sammanthurai) பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபையின் பழைய அலுவலகம் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு இன்று (15) காலை திடீர் கள ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, அங்கு காணப்படும் முக்கிய பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன், வாகன பராமரிப்பு சேவிஸ் சென்டர், களஞ்சியசாலைகள், மற்றும் வாகனங்களை பார்வையிட்டார்.
முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
இதில், பழுதடைந்து செயலிழந்துள்ள வாகனங்களை உடனடியாக பழுதுபார்த்து, திண்மக்கழிவு முகாமைத்துவ பணிகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



